யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் செயல்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்டத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செயற்திட்டத்தின் ஒர் அங்கமாக சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் நீரின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் மரநடுகையும் தொடர்ந்து நாவாந்துறை கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மதத்தலைவர்வர்கள், யாழ். பிரதேச செயலக உத்தியேகத்தர்கள், தேசிய நீர் வழங்கல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், யாழ். மாநகர சபை ஊழியர்கள், கிராம சேவகர்கள், நாவாந்துறை றோ.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள், கிராம மட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் கியூடெக் நிறுவன பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

இச்செயற்திட்டத்திற்கான நிதியுதவியை மிசெரியோ நிறுவனம் வழங்கியிருந்தது.

 

By admin