யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்சித்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்ட அரச பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராமிய குழு தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பரிந்துரைக்கான திட்டமிடல் கருத்தமர்வு 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலியில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திண்மக்கழிவு முகாமைத்துவம், கரையேர சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கம், நிலத்தடி நீர் முகாமைத்துவம், பிளாஸ்ரிக் பாவனை முகாமைத்துவம் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கிருசாந்தி கமலநாதன், வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் திரு. சுபோதரன், யாழ். பல்கலைக்கழக விலங்கியல்துறை பேராசிரியர் கலாநிதி துளசித்தா வில்லியம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை பகுதித்தலைவர் பேராசிரியர் கோசலை மதன் மற்றும் பேராசிரியர் கலாநிதி இராஜேந்திரமணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.