யாழ். ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா கனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தையும் பாடசாலையின் பழைய மாணவருமான அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் பொறியியலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. இராசேந்திரம் இம்மானுவேல் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் திரு. குமாரசாமி கேதீஸ்வரன், ஏழாலை தமிழ் பொதுப்பணி மன்ற தலைவரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. கந்தசாமி சிறியானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியரும் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி. ஜெகதீஸ்வரி சிவகுமார், சங்கானை பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும், பாடசாலையின் பழைய மாணவருமான திரு. தியாகராசா பிரகாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
