யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமைப்பீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் சர்வமத தலைவர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள், அரச ஊழியர்களென பலரும் கலந்துகொண்டனர்.