யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொது பட்டமளிப்பு விழா 19, 20, 21, 22ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் 13 அமர்வுகளாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 3920 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜ் பீரிஸ் அவர்கள் கிறிஸ்தவ நாகரீகத்துறையில் “வேதசாட்சியம் என்ற கருத்தியலின் பின்னணியில் மன்னார் மறைசாட்சியம்” என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்தந்தையர்கள் எட்வின் நரேஸ், மற்றும் அலின் கருணாகரன் ஆகியோர் கிறிஸ்தவ கற்கைநெறிகளில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கிறிஸ்தவ நாகரீகத்துறையில் இவ்வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் விருது இத்துறையின் சிறப்புக் கலைமானி பட்டப்படிப்புத் தேர்வில் கிறிஸ்தவ நாகரிக ஆய்வுக் கட்டுரையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வி. ஜெனிசா சாம்சன் றொட்னி கிசோக்குமார் அவர்களுக்கும் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தந்தை இம்மானுவேல் விருது கிறிஸ்தவப் படிப்புகளில் முதுகலைப் பட்டப்படிப்பில் சிறந்த செயல்திறனுக்கான பேற்றைபெற்ற செல்வி பெனடிற் ஜெகநாதன் ஜெனிற்றா அவர்களுக்கும் அத்துடன் கடந்த வருடம் உருவாக்கப்பட்ட சிறந்த மாணவருக்கான புலவர் அமுது அடைக்கலமுத்து விருது கிறிஸ்தவ நாகரீகத்துறையில் செல்வி ஜேசுதாசன் ஜென்சி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

By admin