யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா கடந்த 14ஆம் 15ஆம் 16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 2873 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்தந்தை ஞானறூபன், அருட்தந்தை எரோனியஸ் ஆகியோர் கிறிஸ்தவ கற்கைநெறிகளில் முதுமாணி பட்டத்தையும் அருட்தந்தை அஜந்தன் அவர்கள் தமிழ் கற்கை நெறியில் முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் செல்வி அனற்ஜெனா ஜெராட் அவர்கள் தமிழ் கற்கைநெறியில் சிறப்பு இளங்கலைமாணி பட்டத்தினையும் திருமறைக்கலாமன்ற நிர்வாக உறுப்பினரும் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் வளவாளருமான திரு. இரட்ணசிங்கம் ஜெயகாந்தன் கல்வியலில் முதுமாணி பட்டத்தினையும் திரு. ஜோண் கலிஸ்ரஸ் பண்பாட்டியலில் முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.