யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் யாழ். மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 7 குழுக்கள் பங்குபற்றியதுடன் பாசையூர் பங்கு முதலாம் இடத்தையும் பேராலய பங்கு இரண்டாம் இடத்தையும் நாவாந்துறை பங்கு மூன்றாம் இடத்தையும் மறைக்கோட்ட ரீதியாக பெற்றுக்கொண்டன.
அத்துடன் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கரோல் பாடல்போட்டி அன்றைய தினம் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மல்வம் பங்கு முதலாமிடத்தையும் இளவாலை யூதாததேயு பங்கு இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.