சன 13. புனித யோசே வாஸ் ஆண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வு சில்லாலையில் நடைபெற்றபோது, அந்நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், இளையோர் ஆண்டினை மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தின் கொடி ஆயரினால் ஏற்றப்பட்டு இளையோர் கீதம் இசைக்கப்பட்டு இவ்வருடத்துக்கான கருப்பொருளை தங்கிய இலட்சினை இளையோரிடம் கையளிக்கப்பட்டது.உலக ஆயர்களின் 15வது மாமன்றம் இளையோரை மையப்படுத்தி ஒன்றுகூடும் இவ்வாண்டில், யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ என்ற கருப்பொருளில் இளையோர் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துக்குள் இலத்திரனியலின் ஆதிக்கம், உலகமயமாக்கல் போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்ட புதிய உலக ஒழுங்கின் பின்புலத்தில், மனித வாழ்வியல் அதிவேகமாக சுழன்றுகொண்டிருக்கும் இக்காலத்தில், இளையோர் தம் வாழ்வை தொலைத்துவிடும் அபாயகரமான சூழலில் அவர்களின் இருப்பை தக்கவைத்து இறை திட்டம் நோக்கி அவர்களை வழிப்படுத்த இவ்வாண்டில் சிறப்பான ஒரு சந்தர்ப்பம் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.