01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புனித மரியன்னை பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் இல்ல வளாக வாயிலிலிருந்து ஆயர் அவர்கள் பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு காலை 9.00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், வேலணை, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், அசிரியர்கள , மணவர்கள் கலந்து கொண்டார்கள்.
திருப்பலியின் முடிவில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 03 இல் இருந்து தரம் 11 வரையான கத்தோலிக்க திருமறைத்தேர்வில் வகுப்பு ரீதியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், திருவிவிலிய அறிவுத் தேர்வு, பேச்சுப் போட்டிகளில் (2017,2018) முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்குமான பரிசில்கள் ஆயர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் மாணவர்கள் சிறப்பிக்கும் ஆயர்தின நிகழ்வுகள் 05.06.2018 செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.