யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. மேரி வினிபிறிடா சுரேந்திரராஜ் அவர்கள் கலந்து ஆசிரியர்களின் மகத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் 75ற்கும் அதிகமான கத்தோலிக்க ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.