யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டியில் வென்றிபெற்று தங்கப்பதக்கத்தை பெற்ற மாணவனான செல்வன் தீபன் ஹரிகணன் மற்றும் மாகாண மட்ட பாவோதல் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி செல்வி மேரிசா யஸ்ரின் பர்னாந்து ஆகியோருக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கோட்டக்கல்வி அதிகாரி திரு.நற்குணலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.