கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மறையாசிரியர்கள், மறைத்தள அருட்பணிச் சபை, நிதிபரிபாலன சபை மற்றும் வழிபாட்டுக்குழு அங்கத்தவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகளென பலரும் கலந்துகொண்டனர்.