பண்டத்தரிப்பு பங்கின் மேய்ப்புப்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் மேய்ப்புப்பணி பேரவையின் கடமைகள், பொறுப்புக்கள், செயற்பாடுகள் பற்றிய கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் மேய்ப்புப்பணி குழுவினர், மறையாசிரியர்கள் மற்றும் பாடகர் குழாமினர் கலந்துகொண்டனர்.

By admin