இளையோருக்கான எதிர்கால வாழ்க்கை தெரிவை நோக்காகக்கொண்டு மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. ஸ்ரீபவான் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை வழிப்படுத்தியதுடன் யாழ் மாட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் திருமதி யாழினி மற்றும் சர்மினி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இளையோர் பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.