முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கடந்த 11ஆம் 12ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு கோட்டத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை இணைத்து கோட்டத் தலைவர் திரு. ளு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1200ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து போட்டிகளில் பங்குபற்றினார்கள்.