முல்லைத்தீவு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை மாணவத்தலைவி செல்வி தரணிகா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு. இசுதோர் பெர்னான்டோ, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.