முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை துறந்து அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் அவர்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பல சமூக ஆர்வலர்களும்இ மனித உரிமை ஈடுபாட்டாளர்களும், மதகுருக்களும் குரல் எழுப்பி வருகின்றார்கள்.
இதன் ஒரு செயற்பாடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 6ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்றலில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள், என பலரும் கலந்து தமது ஆதரவை வழங்கினர்.