முல்லைத்தீவு மறைக்கோட்ட பரலோகத்தின் வாசல் கியூரியாவின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கியூரியா தலைவராக முல்லைத்தீவு வரப்பிரகாச மாதா பிரசீடியத்தைச் சேர்ந்த திருமதி. மேரி ஆன் இருதயலீனா அவர்களும் செயலராக புதுக்குடியிருப்பு பிரசீடியத்தை சேர்ந்த திருமதி. மேரி கமலா அவர்களும் பொருளாளராக சிலாவத்தை பிரசீடியத்தை சேர்ந்த திருமதி. செல்வராணி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளின் பிரசீடிய அங்கத்தவர்களும் கியூரியா அங்கத்தவர்களும் கலந்துகொண்டார்கள்.