முல்லைத்தீவு மறைக்கோட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் 2023ஆம் ஆண்டில் மறைக்கோட்ட பங்குகளில் நடைபெற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.