முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் வலைஞர்மடம் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
செபமாலைத் தியானத்தடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, தியான உரை என்பன இடம்பெற்றதடன் மறைக்கோட்ட பங்குகளில் முன்னெடுக்கப்படும் பங்குச்செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆணைக்குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களுக்கான புதிய இணைப்பாளர்கள் தெரிவும் இடம்பெற்றது.
விவிலிய மற்றும் மறைக்கல்வி ஆணைக்குழு இணைப்பாளராக அருட்தந்தை எமில் போல் அவர்களும், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொன்சியன் அவர்கள் குடும்ப அப்போஸ்தல இணைப்பாளராகவும், அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் பொதுநிலையினர் ஆணைக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்கள் வழிபாட்டு பணிக்குழு இணைப்பாளராகவும், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்கள் நீதி மற்றும் சமாதான ஆணைக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்கள் சமூக தொடர்பாடல் ஆணைக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்கள் இளையோர் ஆணைக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் மரியாயின் சேனை இணைப்பாளராகவும், அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்பு பணிக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை ஜெறி குயின்ரஸ் அவர்கள் ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் பணிக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை மரியதாஸ் அவர்கள் அன்பிய ஆணைக்குழு இணைப்பாளராகவும், அருட்தந்தை அகஸ்ரின் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சம்பத் பெரேரா ஆகியோர் திருத்தந்தையின் மறைபரப்பு சபைகள் மற்றும் பீடப்பணியாளர் பணிக்குழு இணைப்பாளர்களாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.