முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு றோ.க.வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் மாலை விளையாட்டு நிகழ்வுகளும், வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஒன்றிய முன்னைநாள் உறுப்பினர்கள் செல்வன் றோம் மற்றும் செல்வி மேரி ஜென்சியா ஆகியோருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
கலைநிகழ்வுகளில் சிறப்பு நிகழ்வாக உடையார்கட்டு பங்கு இளையோரின் நடிப்பில் உருவான சமூக விழிப்புணர்வு நாடகமும் மேடையேற்றப்பட்டது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை பிறாயன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, வன்னி கரித்தாஸ் கியூடெக் இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் புதுக்குடியிருப்பு றோ.க.வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொன்சியன் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கியிருந்தார்.