முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் திரு. கதம்பசோதி அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு. பாஸ்கரன் மற்றும் முல்லைத்தீவு வலய தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பையா மதியழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் அமலமரித்தியாகிகள் சபையின் வவுனியா மறையுரைஞர் குழும முதல்வர் அருட்தந்தை ஜெயபாலன் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க முன்னைநாள் செயலாளர் திரு. லோரன்ஸ் டெஸ்மன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டதுடன் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் தமிழ்மாறன் அவர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.