முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்தின நிகழ்வு 02ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், மாணவர்களுக்கான நினைவுப்பரிசில்கள் வழங்கல், விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன், முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, புனித வளன் முன்பள்ளி முதல்வர் அருட்சகோதரி கில்டா , முன்னைநாள் அதிபர், பழைய மாணவர் சங்க இணைப்பாளர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.