உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு 31ஆம் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுப் பங்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு மறைக்கோட்ட 16 வயதுக்குட்பட்ட பீடப்பணியாளர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்திலும் தொடர்ந்து மாலை முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.