மன்னார் மறைமாவட்டத்திலுள்ள முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் டொன்பொஸ்கோ மாணவர் இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட அன்பிய மத்திய குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சார்லஸ் தயாளன் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, கருத்துரைகள், குழுஆய்வு, விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், என்பன இடம்பெற்றன.
முருங்கன் மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான அன்பிய பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.