முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கமலாநந்தன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

 

By admin