பண்டத்தரிப்பு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “மீட்பின் குருதி” திருப்பாடுகளின் காட்சி கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை திருத்தல முன்றலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரன் டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்திருப்பாடுகளின் காட்சியை ஆசிரியர் விஜயகுமார் அவர்கள் நெறிப்படுத்தினார்.
பண்டத்தரிப்பு பங்கு இளையோரின் முயற்சியில் குறுகிய கால பயிற்சியுடன் முதன் முதலாக மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையில் ஏராளமான மக்கள் பக்திபூர்வமாக இணைந்திருந்தனர்.
அத்துடன் பண்டத்தரிப்பு பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 46 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.