மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவா போல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றன. மேலும் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக குடும்பங்களுக்குள்ளும் குடும்பங்களுக்கிடையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வின் இறுதி போட்டிகள் திருவிழா அன்று மாலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுக்கள், மகிழ்வூட்டும் நிகழ்வுகள் என்பவை சிறுவர்கள் வளர்ந்தவர்கள், பெரியோர்களிடையே நடாத்தப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளையும் வழங்கிவைத்தார்.
 
இவ்விளையாட்டு நிகழ்வில் ஆலயபங்கு மக்கள், அயல்பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin