மானிப்பாய் திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் வவுனியா கல்வாரியை தரிசித்து அங்கு நடைபெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினர்.
தொடர்ந்து இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தையும் தரிசித்ததுடன் இவ்யாத்திரையில் 50 பேர் பங்குபற்றியிருந்தனர்.