யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மானிப்பாய் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த களப்பயண திருயாத்திரை 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோரும் பிள்ளைகளும் இணைந்து யாழ். புனித மரியன்னை பேராலய யூபிலி கதவு, சின்ன மடு மாதா ஆலயம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், யாழ். பொது நூலகம், சுப்பிரமணியம் பூங்கா ஆகிய இடங்களை தரிசித்தனர்.
இந்நிகழ்வில் 44 பிள்ளைகள் பங்குபற்றி பயனடைந்தனர்.