காலி மறைமாவட்ட மாத்தறை அன்னை தேசிய திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை சம்பத் விலேகொட அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் 07ஆம் திகதி மாலை அன்னையின் திருச்சொருப பவனியும் இடம்பெற்றதுடன் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயரும் மட்டக்களப்பு மறைமாவட்ட பரிபாலகருமான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருவிழா திருப்பலியில் இலங்கையின் பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.