மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

நற்கருணைவிழா திருப்பலிக்கு முன்பாக அன்னையின் திருச்சுருப பவனி இடம்பெற்றதுடன் திருவிழாவை சிறப்பித்து திருவிழா அன்று மாலை மாதகல் புனித தோமையார் கலைமன்ற மாணவிகளால் அரச கதையை அடிப்படையாக கொண்டமைந்த “மகுடம் காத்த மங்கை” நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.

By admin