யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது.

இவ் உதவியை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை கியூடெக் கரித்தாஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நீலாம்பரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. சர்வேஸ்வரா ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களின் திறன்விருத்தி மற்றும் கா.பொ.த உயர்தரம், பல்கலைக்கழக பாடத்தெரிவுகள் தொடர்பான கருத்துரைகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் 2023ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.

கரித்தாஸ் கொரியாவின் நிதிப்பங்களிப்புடன் கரித்தாஸ் தேசிய நிறுவனத்தின் ஊடாக கடந்த 5 வருடங்களாக 75 மாணவர்களுக்கு இவ்உதவி வழங்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin