கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வுகள் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் வழிகாட்டலில் இவ்வருடம் தரம் 11ல் கல்விகற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித விஞ்ஞான பாட செயலமர்வுகளில் ஆசிரியர்களான திரு. முகுந்தன் திரு. நிசாந்தன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினர்.
இச்செயலமர்வில் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.