அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மண்டைதீவு மகா வித்தியால பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்டைதீவு பங்குதந்தை அருட்திரு டேவிற் அவர்கள் 62 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.