போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இத்திட்டத்தின் ஒரு செயற்பாடான மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளில் முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்திலும் கிளிநொச்சி கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்திலும் நடைபெற்றன.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அருட்தந்தை அன்ரன் ஜெராட் மற்றும் செல்வி நிதினா ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உளநல விருத்தி தொடர்பான கருத்துக்களை வழங்கி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளையும் நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 75ற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin