மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ் ஆயத்த நாட்களில் யூபிலி சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன் இவ்வாலயம் திருத்தலமாக்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற முதலாவது திருவிழா இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin