மாங்குளம் டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட குருமட பாதுகாவலர் புனித டொன் பொஸ்கோ திருவிழா கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குருமட அதிபர் அருட்தந்தை பயஸ் ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர்.