திருச்சிலுவை கன்னியர் சபையின் புதிய மாகாண முதல்வியாக அருட்சகோதரி மனப்பு பௌலீனா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு தலுவகொட்டுவவிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன் அன்றைய தினம் இவருடைய ஆலோசகர்களாகவும் 05 அருட்சகோதரிகள் பதவியேற்றனர்.
அத்துடன் சபையின் புதிய அருட்சகோதரிகளான மோகனா, தனுசினி ஆகியோர் கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தமது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை தலைமை அலுவலகத்தில் நிறைவேற்றினார்கள்.