மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பியக் குழுமங்களின் களஅனுபவ பயணம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மல்வம் பங்கின் அன்பியக் குழுமங்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலய அன்பியக் குழுமங்களை சந்தித்து அன்பிய அனுபவ பகிர்வை மேற்கொண்டார்கள்.
மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் மற்றும் பேராலயப் பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட அன்பிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.