மல்வம் உடுவில் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 8,9,10ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இத்தவக்கால யாத்திரையில் 45ற்கும் அதிகமான இளையோர்கள் இணைந்து கல்குடா, தலவில, அநுராதபுரம் ஆகிய இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, தியான உரை என்பவற்றில் கலந்துகொண்டனர்.