யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள லொயலா கம்பசில் பணியாற்றும் இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் சுரேஸ்அவர்கள்
இத்தியானத்தை நெறிப்படுத்தினார். அத்துடன் இரண்டாம் குழுவினருக்கான தியானம் எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்காலத்தில் எம் குருக்களுக்காக சிறப்பாக செபிப்போம்.