மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னியின் திருநாளை சிறப்பிக்குமுகமாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 21ஆம் திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் கலந்து ஆன்மீக வாழ்வு எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கருத்துரையின் நிறைவில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நற்கருணை வழிபாடும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.



