மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்தவாரம் அங்கு நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகளால் இல்லத்தரிசிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதி நாளாகிய 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலியும் சந்தை நிகழ்வு இடம்பெற்றன. தொடர்ந்து இளையோர், மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பாசறை நிகழ்வும் திருக்குடும்ப கன்னியர்மட அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்டது.