சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்படுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. சிறிபவன் அவர்கள் வளவாளராக மாணவர்களை வழிப்படுத்தியதுடன் யாழ். மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் திருமதி யாழினி மற்றும் சர்மினி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 100 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.