யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் மறைக்கல்வி சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயிற்சி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்; நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி செயற்பாடுகள் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் கடந்த 20, 21ஆம் திகதிகளில் புங்குடுதீவு பங்கை தரிசித்து மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வையும், இல்லத்தரிசிப்புக்களையும் மேற்கொண்டனர்.
புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இக்கருத்தமர்வில் 20 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 10 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.