மருதமடு அன்னையின் திருச்சொருபம் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை ஒட்டகப்புலம் பங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக அன்னையின் திருச்சொருபம் கொண்டுசெல்லப்பட்ட போது இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300 வரையான இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக ஒன்றுகூடி அன்னையை பக்தியுடன் வரவேற்று அன்னையின் ஆசீரைப் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படையின் உதவியுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் மருதமடு அன்னையின் திருச்சுருபம் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு பங்குகளிற்கு கடல் மார்க்கமாக எடுத்துச்செல்லப்பட்டு அப்பங்குகளில் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.