பாசையூர் புனித அந்தோனியார் ஆலய இரட்சகர் மாதா வளர்ந்தோர் பெண்கள் பிரசீடியம் மற்றும் விடியற்காலத்தின் விண்மீன் ஆண்கள் பிரசீடியம் இணைந்து முன்னெடுத்த பிரசீடியவிழா கடந்த மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அயற்பங்கு பிரசீடிய பிரதிநிதிகளுடனான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 50 வரையானவர்கள் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.