இலங்கை மரியாயின் சேனை செனாதூஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய செபமாலை பேரணி 21ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது.
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தொடர்ந்து செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
மரியாயின் சேனை தேசிய இயக்குநரும் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயருமான பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ, அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோபட் அந்த்ராடி ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மரியாயின் சேனை பிரசீடிய உறுப்பினர்கள் என 4000க்கும் அதிமானோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.