மன்னார் – முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முருங்கன் பங்கை சேர்ந்த ஆறு துணை ஆலய இறைமக்கள் இணைந்து கரோல் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்ததார்கள்.
மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை றொக்சன்குரூஸ் அவர்கள் பிரதமவிருந்தினராகவும் முருங்கன் மெதடிஸ்த ஆலய போதகர் நித்தியஜீவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், முருங்கன் கிராமசேவகர் திரு. நித்தியானந்தன் றெவல், வைத்தியகலாநிதி திரு. ஒஸ்மன் சாள்ஸ், மற்றம் திரு. றொஜர் ஸ்ராலின், திரு. மகேந்திரகுமார், திரு. பாஸ்கரநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் உதவிப்பங்குத்தந்தை, அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.